உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருவாங்கரணை தாங்கல் நீரில் மூழ்கி சிறுமி பலி

திருவாங்கரணை தாங்கல் நீரில் மூழ்கி சிறுமி பலி

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், திருவலாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சாட்சரம். இவரது மகள் பார்கவி, 12.பார்கவி, அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சிறுமியுடன், திருவாங்கரணை ஏரி அருகே உள்ள தாங்கல் பகுதிக்கு, பார்கவி குளிக்க சென்றார்.அப்போது, ஆழம் அதிகம் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் குளித்த போது, பார்கவி சேற்றில் சிக்கி தவித்துள்ளார்.இதை கண்ட உடன் சென்ற மற்றொரு சிறுமி, அலறியடித்து கூச்சலிட்டதையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, பார்கவியை மீட்டனர்.மயக்கத்தில் இருந்ததால், காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து, அவரது உடலை, பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வாலாஜாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ