நல்லதண்ணீர் குளம் சீரமைப்பு
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மேட்டுப்பாளையம் ஊராட்சி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக நல்லதண்ணீர் குளம் உள்ளது. இக்குளம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் துார்ந்து போனதை அடுத்து, குளத்தை துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, 2020 - -21ம் ஆண்டு, மஹாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ், 20.55 லட்சம் ரூபாய் செலவில் குளம் துார்வாரி, கரைகள் பலப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டது. பல லட்சம் ரூபாய் செலவழித்து சீரமைத்த குளத்தை, ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கதால், சில மாதங்களில் துார்ந்து போனது.தற்போது, தனியார் பொறுப்பு நிதியின் கீழ், குளம் மீண்டும் துார்வாரி சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொக்லைன் வாயிலாக குளத்தில் இருந்து மண் எடுத்து, குளக்கரையை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.