உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிலாம்பாக்கம் வரை அரசு பேருந்து நீட்டிப்பு

சிலாம்பாக்கம் வரை அரசு பேருந்து நீட்டிப்பு

உத்திரமேரூர்,சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து, உத்திரமேரூர், காரணிமண்டபம், கலியாம்பூண்டி வழியாக அழிசூர் வரை, தடம் எண்: 77பி பேருந்து வந்து செல்கிறது.இந்த பேருந்தை பயன்படுத்தி, சுற்றுப்புற கிராம மக்கள் தினமும் சென்னைக்கு சென்று வரு கின்றனர். இந்நிலையில், அழிசூர் அருகே உள்ள சிலாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள், இரண்டு கிலோ மீட்டர் துாரம் சென்று, பேருந்தை பிடிக்கும் நிலை இருந்தது. இதனால், பேருந்தை சிலாம்பாக்கம் வரை நீட்டிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது, பேருந்து சிலாம்பாக்கம் வரை தினமும், இரண்டு நடை நீட்டிப்பு செய்துள்ளது. அதற்கான சேவையை உத்திரமேரூர் தி.மு.க.,-- எம்.எல்.ஏ.,- சுந்தர் நேற்று துவக்கி வைத்தார்.காஞ்சிபுரம் மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி