உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  ஊராட்சிகள், தணிக்கை பிரிவுகள் ஒருங்கிணைத்து அரசாணை

 ஊராட்சிகள், தணிக்கை பிரிவுகள் ஒருங்கிணைத்து அரசாணை

காஞ்சிபுரம்: ஊராட்சிகள், தணிக்கை இரு பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என, வடக்கு, தெற்கு என, இரு பிரிவுகளாக பிரித்து, புதிய அரசாணை அத்துறை பிறப்பித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊராட்சிகளை கண்காணிக்கும் உதவி இயக்குநர் மற்றும் தணிக்கை பிரிவுக்கு உதவி இயக்குநர் என, தனித்தனி உதவி இயக்குநர்கள் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை கலைத்து விட்டு, ஊராட்சிகள் மற்றும் தணிக்கை வடக்கு, தெற்கு என, இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. இதேபோல, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகம் முழுதும் பிரிக்க ஊரக வளர்ச்சி துறை அரசாணை பிறப்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !