மேலும் செய்திகள்
பள்ளிகளில் ஆண்டுவிழா கொண்டாட்டம்
25-Mar-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, மேட்டுக்குப்பம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் ஆண்டு விழா, ஊராட்சி தலைவர் பேபி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு போன்றவை இவ்விழாவில் நடந்தது. பள்ளிக்கு 100 சதவீதம் வருகை பதிவு செய்த மாணவர்களுக்கு பதக்கமும், கலைத் திருவிழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு கேடயமும், பாராட்டு சான்றும் வழங்கப்பட்டன.பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியிலேயே, 2025- - 26ம் கல்வி ஆண்டுக்கு, 13 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகள், பரிசளிப்பு நிகழ்வுகள் ஆண்டு விழாவில் நடந்தன.இந்நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலர் கண்ணன், தலைமை ஆசிரியை கலையரசி உட்பட பலர் பங்கேற்றனர்.
25-Mar-2025