உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா

குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் சார்பில் பூங்காவனம் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையம் இயங்கி வருகிறது.இம்மையத்தில், பயிற்சி பெற்ற குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா, மையத்தின் முதுநிலை திட்ட மேலாளர் துாயவன் தலைமையில் நேற்று நடந்தது.சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஸ்ரீசத்ய சாயி சேவா நிறுவன ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், குழந்தைகளுக்கு பட்டம் வழங்கினார்.வட்டார கல்வி அலுவலர் ரவி வட்டார மேற்பார்வையாளர் குளோரி எப்சியா, ஆசிரியர் பயிற்றுனர் ரேவதி, குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் உதவி பொது மேலாளர் மோகனவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை