உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் அமைக்க சுகாதாரத்துறை கோரிக்கை

மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் அமைக்க சுகாதாரத்துறை கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு புற்று நோய் மருத்துவமனையில், 24 மணி நேரமும் இயங்கும் வகையில், புறக்காவல் நிலையம் செயல்பட சுகாதாரத்துறை கோரிக்கை விடுத்துள்ளது. காஞ்சிபுரம் அடுத்த, காரை கிராமத்தில், அண்ணா புற்றுநோய் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனை ஏற்கனவே 290 படுக்கை கொண்டதாக செயல்பட்டு வரும் நிலையில், 220 கோடி ரூபாய் மதிப்பில், 5 அடுக்கு கொண்ட பெரிய அளவிலான மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதில், 500 படுக்கை வசதிகள் மற்றும் சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளன. இம்மருத்துவமனைக்கு தினமும் நுாற்றுக்கணக்கான நோயாளிகளும், பார்வையாளர்களும் வந்து செல்கின்றனர். ஆனால், இம்மருத்துவமனைக்கு புறக்காவல் நிலையம் இதுவரை இல்லை. சமீபத்தில் நடந்த மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தில், புற்றுநோய் மருத்துவமனைக்கு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற தேவையை, மாநில சுகாதார பேரவைக்கு அதிகாரிகள் எழுதி அனுப்பி உள்ளனர். புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என சுகாதாரத் துறை கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, காஞ்சி புரம் டி.எஸ்.பி., சங்கர் கணேஷ் கூறியதாவது: புற்றுநோய் மருத்துவ மனையில் 24 மணி நேரமும் போலீசார் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே, போலீசார் பற்றாக்குறை இருப்பதால், 24 மணி நேரமும் எப்படி பாதுகாப்பு பணி வழங்க முடியும் என ஆலோசிக்கிறோம். எஸ்.பி.,யிடம் இதுபற்றி ஆலோசனை செய்து போலீசாரை பணியில் நியமிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை