நிபந்தனையற்ற நிதியில் முறைகேடு சுகாதார துறையினர் நுாதனம்
காஞ்சிபுரம், காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள்; ஐந்து நகர் நல மையங்கள்; 28 ஆரம்ப சுகாதார நிலையங்கள்; 168 துணை சுகாதார நிலையங்கள் என, 206 சுகாதார நிலையங்கள் உள்ளன.இந்த சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி, பொது மருத்துவம் ஆகியவைக்கு தனித்தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதேபோல, முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.இந்த நிதிகளுக்கு, ஆண்டுதோறும் கணக்கு சரி பார்க்கப்படுகிறது. குறைபாடுகள் இருப்பினும், பதிவேட்டில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் வசூலிக்கப்படுகிறது.இதில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நகர் நல மையம் ஆகியவைக்கு, தேசிய ஊரக நல திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான பழுது நீக்குதல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், நிழற்கூரை ஏற்படுத்துதல் ஆகிய சிறிய அளவிலான பணிகளை மேற்க்கொள்ள நிபந்தனையற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.இந்த நிதிக்கு கணக்கு காட்ட தேவையில்லை. செலவினங்களின் ரசீது வைத்தால் போதும்.இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பழுது நீக்கியதாகவும், குடிநீர் குழாய் உடைப்பு சேதங்களை சீரமைத்ததாகவும், செவிலியர்கள் பயன்படுத்தும் உபகரணச் செலவு, பயண செலவுக்கு வழங்கியதாக ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மற்றும் வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் வாரி சுருட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குறிப்பாக, ஒரு நிதி ஆண்டிற்கு, நிதி ஒதுக்கீடு செய்யும்போது, 1 ரூபாய்கூட மிச்சம் இல்லாமல் செலவிடப்படுவது பல்வேறு விதமான சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐந்து ஆண்டுகளாக ஒதுக்கீடு செய்த நிதியை, சரியாக பயன்படுத்தி இருப்பதாக செலவு கணக்கு காட்டி முடித்துள்ளனர்.உதாரணமாக, 2020- - 21ம் நிதி ஆண்டிற்கு, 25.78 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளனர். இந்த நிதி முழுதுமாக பயன்படுத்தி இருப்பு விபரம் பூஜ்ஜியமாக்கப்பட்டுள்ளது.இதேபோல, ஐந்து நிதி ஆண்டுகளுக்கு 1.24 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.இது குறித்து, சுகாதாரத் துறை ஊழியர் ஒருவர் கூறியதாவது:அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான பழுது பார்த்தல், குடிநீர் சுத்திகரிப்பு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தனியார் தொழிற்சாலை நிறுவனத்தின் பங்களிப்புடன் செய்து விடுகின்றனர்.ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார மருத்துவ துறையினருக்கு நிபந்தனையற்ற நிதியில் செய்ததாக கணக்கு காட்டி உள்குத்து செய்து விடுகின்றர். இதை யாரும் தட்டிக்கேட்க முடியாது. மீறினால், இடமாறுதல், பணி நீக்கம் ஆகிய நவடிக்கை பாய்வதால் புகார் அளிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை சரியாக பயன்படுத்துகின்றனர். முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை' என்றார்.
நிபந்தனையற்ற நிதி ஒதுக்கீடு விபரம்
நிதி ஆண்டு நிதி லட்சம் ரூபாயில் இருப்பு2020- - 21 25.78 02021- - 22 19.03 02022- - 23 38.12 02023- - 24 22.68 02024- - 25 18.65 0மொத்தம் 1.24 கோடி 0