தாட்டித்தோப்பு தரைப்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வேகவதி ஆற்றின் குறுக்கே உள்ள தாட்டித்தோப்பு, பல்லவர் குடியிருப்பு தரைப்பாலம் வழியாக, கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, தடுப்பு அமைக்கப் பட்டுள்ளது. காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் இருந்து, தாட்டித்தோப்பு பல்லவர் குடியிருப்பு இடையே செல்லும் வேகவதி ஆற்றின் குறுக்கே, தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையால் தற்போது, வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தரைப்பாலம் வழியாக அதிக பாரம் ஏற்றிய கனரக வாகனம் சென்றால் விபத்து ஏற்படும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு, தரைப்பாலத்தின் இரு பகுதியிலும் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது.