உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உயரமான ‛காஸ் லைன் மேன்ஹோல்‛ தொட்டி மாத்துார் சர்வீஸ் சாலையில் விபத்து அபாயம்

உயரமான ‛காஸ் லைன் மேன்ஹோல்‛ தொட்டி மாத்துார் சர்வீஸ் சாலையில் விபத்து அபாயம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சர்வீஸ் சாலை நடுவே, உயரம் அதிகமாக உள்ள, 'காஸ் பைப் லைன் மேன்ஹோல் தொட்டி'யால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.தமிழகத்தில் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது. அந்த வகையில், ஒரகடம் சுற்றுவட்டார பகுதிகளில், 'காஸ் பைப் லைன்' அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதற்காக, சாலையோரங்களில், 'பைப் லைன்' போடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்பெருமாள்கோவில் சர்வீஸ் சாலையை நடுவே பள்ளம் தோண்டி,, 'காஸ் பைப் லைன்' பதிக்கப்பட்டுள்ளன.இந்த சர்வீஸ் சாலையில், ஒரகடத்தில் இருந்து, மாத்துார் செல்லும் சாலையில், ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் மேன்ஹோல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், சாலையைவிட அரை அடி உயரமாக தொட்டியும் அதன் மீது, மூடியம் போடப்பட்டுள்ளது. அதனால், அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள், எதிர்பாராத விதமாக மேன்ஹோல் தொட்டியில் மோதி விபத்தில் சிக்குகின்றனர்.குறிப்பாக, இரவு நேரங்களில் இவ்வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலை நடுவே உள்ள மென்ஹோல் தொட்டியில் மோதி, விழுந்து காயமடைந்து வருகின்றனர்.எனவே, சாலையின் உயரத்திற்கு ஏற்ப, 'காஸ் லைன் மேன்ஹோல்' தொட்டியின் உயரத்தை குறைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி