உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புரிசை அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் பணி துவக்கம்

புரிசை அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் பணி துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த புரிசை கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 110 மாணவ - -மாணவியர் படித்து வருகின்றனர்.கடந்த 8 ஆண்டுகளுக்கு முன், இந்த பள்ளிக்கு இரண்டு அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டது. இருப்பினும், பள்ளிக்கு சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்தி தரவில்லை.இதனால், ஆடு, மாடுகள் பள்ளி வளாகத்தில் எளிதாக சுற்றித் திரிகின்றன. இதனால், மாணவ - மாணவியர் அச்சத்தில் உள்ளனர்.எனவே, புரிசை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க, 52 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, 520 மீட்டர் துாரத்திற்கு, பொதுப்பணி துறையினர் சுற்றுச்சுவர் கட்டும் பணியை துவக்கி உள்ளனர்.இந்த பணி, பருவ மழைக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை