ரயில் முன்பதிவு மையம் முழு நேரம் செயல்பட வலியுறுத்தல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில், 2002ல் துவக்கப்பட்ட புதிய ரயில் நிலையத்தில், கம்ப்யூட்டர் முன்பதிவு பயணச்சீட்டு வழங்கும் மையம் இயங்கி வருகிறது.கொரோனா ஊரடங்குக்கு முன் தினமும் காலை 8:00முதல் மதியம் 2:00 மணி வரையிலும், மதியம் 2:15 - இரவு 8:00 மணி என நாள்முழுதும், கம்ப்யூட்டர் முன்பதிவு பயணச் சீட்டு வழங்கும் மையம் செயல்பட்டு வந்தது. ஊரடங்கில் பல்வேறு தளர்வு ஏற்பட்ட பின் னும், காலை 8:00 முதல் மதியம் 2:00 மணி என, அரை நாள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.எனவே, காலை 8:00 - இரவு 8:00 மணி வரை, கம்ப்யூட்டர் முன்பதிவு பயணச்சீட்டு வழங்கும் மையம் இயங்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.