குடிநீர் தொட்டிக்கு குழாய் அமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியம்புத்தேரி ஊராட்சி, சாலபோகம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில், கால் நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில், கடந்த 2019ம் ஆண்டு குடிநீர் தொட்டிகட்டப்பட்டது.அருகிலேயே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்தும், கால்நடை தொட்டியில் தண்ணீர் நிரப்ப குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், மேய்ச்சலுக்கு சென்று வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் தாகம் தீர்க்க முடியாத நிலையில், குடிநீர் தொட்டி வீணாகி வருகிறது.எனவே, குழாய் ஏற்படுத்தி, தண்ணீர் நிரப்பநடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.