புதர் மண்டி கிடக்கும் கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தையொட்டி உள்ள பொன்னேரி ஏரிப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரி முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறும் கால்வாய் உள்ளது.இக்கால்வாய், புதிய ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கிடும் இடத்தில் சிறுபாலம் உள்ளது. இந்த பாலத்தின் நீர்வழித் தடத்தில், குப்பை குவியல் செடி, கொடிகள் புதர்மண்டியுள்ளதால் துார்ந்த நிலையல் உள்ளன. இதனால், ஏரி முழுமையாக நிரம்பினால் உபரிநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் பொன்னேரி ஏரியில் இருந்து, உபரிநீர் வெளியேறும் சிறுபாலத்தின் நீர்வழித்தடத்தில் மண்டி கிடக்கும் குப்பை குவியல், புதர்போல மண்டி கிடக்கும் செடி, கொடிகளை அகற்றி, சிறுபாலத்தின் நீர்வழித்தடத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.