அங்கன்வாடி பணியிடம் நிரப்ப நேர்காணல்
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பி.டி.ஒ., அலுவலகத்தில், அங்கன்வாடி பணியிடங்களுக்கான நேர்காணல் நடந்தது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 940 அங்கன்வாடி மையம் செயல்படுகின்றன. இதில், காலியாக உள்ள பணியிடம் நிரப்ப ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், அங்கன்வாடி பணிகளில் 197 இடங்கள் காலியாக உள்ளன. இதற்காக விண்ணப்பித்து தகுதி உள்ள 474 விண்ணப்பதாரர்களுக்கு கடந்த மாதம் 21ம் தேதி முதல் நேர்காணல் நடைபெற்று வருகிறது.அதன்படி, வாலாஜாபாத் வட்டாரத்தில் காலியாக உள்ள 5 அங்கன்வாடி பணியாளர்கள், 8 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 19 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டன.விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல், வாலாஜாபாத் பி.டி.ஒ., அலுவலகத்தில், நேற்று நடந்தது. இதில், 127 பேர் பங்கேற்றனர்.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் கந்தன், வாலாஜாபாத் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் இந்திரா உள்ளிட்டோர் நேர்முகத் தேர்வு நடத்தினர்.இன்று மற்றும் நாளையும் இந்த நேர்காணல் தொடர்ந்து நடைபெற உள்ளது.