உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஜவுளி நிறுவனத்தில் தாட்கோ மூலம் பயிற்சி பட்டியலின இளைஞர்களுக்கு அழைப்பு

ஜவுளி நிறுவனத்தில் தாட்கோ மூலம் பயிற்சி பட்டியலின இளைஞர்களுக்கு அழைப்பு

காஞ்சிபுரம்:தாட்கோ எனப்படும் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலமாக, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட அறிக்கை:தற்போது சென்னை, வேளச்சேரியில் உள்ள விவேஷியஸ் அகாடமி நிறுவனம் மற்றும் தாட்கோ இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது.இப்பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டிற்கு, 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.இப்பயிற்சிக்கான கால அளவு 30 நாட்களாகும். மேலும், சென்னை வேளச்சேரியில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தர சான்றிதழ் வழங்கப்படும்.இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, பயிற்சி உபகரணங்கள் மற்றும் உணவு வழங்கப்படும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி