உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருநங்கையருக்கு குடும்ப அட்டை வழங்கல்

திருநங்கையருக்கு குடும்ப அட்டை வழங்கல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக, திருநங்கையர், திருநம்பியர் வாழ்வாதாரத்தில் முன்னேறுவதற்காக, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், காலாண்டு ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் சமூக நலத் துறை, உணவு வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் 40க்கும் மேற்பட்ட திருநங்கையர், திருநம்பியர் பங்கேற்றனர்.ஆய்வுக் கூட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை, மின்னணு குடும்ப அட்டை, இலவச வீட்டுமனை பட்டா, மாநில அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை, திருநங்கையருக்கான ஓய்வூதியம், உயர்கல்வி உதவித்தொகை போன்றவை அரசிடம் கேட்டனர்.அதை தொடர்ந்து, 10 திருநங்கையருக்கு, புதிய மின்னணு குடும்ப அட்டைகளை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை