உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 304 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கல்

304 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கல்

உத்திரமேரூர்;உத்திரமேரூரில், 304 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா நேற்று வழங்கப்பட்டது. உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் , உத்திரமேரூர் வருவாய் துறை சார்பில், பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஆஷிக் அலி தலைமையில் நேற்று நடந்தது. உத்திரமேரூர் ஒன்றியக் குழு சேர்மன் ஹேமலதா, தாசில்தார் சுந்தர் முன்னிலை வகித்தனர். உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். அதில், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த, 304 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை