துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள துாய்மை காவலர், துாய்மை பணியாளர்களுக்கு, தாட்கோ மூலம் தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் நலவாரிய அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது . காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை காவலர், துாய்மை பணியாளர்களர்களுக்கு, துாய்மை பாரத இயக்கம் ஊரகம் சார்பில், தாட்கோ மூலம் தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் நலவாரிய அடையாள அட்டை வழங்கும் விழா சிறுகாவேரிபாக்கத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இதில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், காஞ்சிபுரம் ஒன்றிய சேர்மன் மலர்கொடி குமார் ஆகியோர் காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை காவலர், துாய்மை பணியாளர் என, மொத்தம் 107 பேருக்கு நலவாரிய அடையாள அட்டையை வழங்கினர். தாட்கோ நல வாரிய அட்டை மூலம் உறுப்பினர்கள் எந்தெந்த நலதிட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என, தாட்கோ மண்டல மேலாளர் ராஜசுதா பேசினார். விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் காஞ்சனா, ஊராட்சிமன்ற தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.