உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிரஹபிரவேசம் நடந்த வீட்டில் நகை, மொபைல் போன் திருட்டு

கிரஹபிரவேசம் நடந்த வீட்டில் நகை, மொபைல் போன் திருட்டு

சோமங்கலம்:குன்றத்துாரை அடுத்த சோமங்கலம், ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் ஜெயபாண்டியன், 35. இவர், புதிதாக வீடு கட்டி, அந்த வீட்டிற்கு, நேற்று கிரஹபிரவேசம் நடத்தினார்.நேற்று முன்தினம் நள்ளிரவு, பூசணிக்காய் உடைத்தனர். அப்போது, வீட்டில் யாரும் இருக்கக்கூடாது என்பதால், அனைவரும் பின்புறம் சென்றுவிட்டனர். வீட்டிற்கு தாழ்ப்பாள் மட்டுமே போட்டிருந்தனர்.இந்நிலையில், இதை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர், புதிய வீட்டிற்குள் புகுந்து, நான்கு கிராம் மோதிம், 10,000 ரூபாய், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த யூனிகான் இருசக்க வாகனம் ஆகியவற்றை திருடி சென்றார்.பூசணிக்காய் உடைத்த பின், சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த ஜெயபாண்டியன், நகை, பணம், மொபைல் போன் திருடப்பட்டதை அறிந்து, அதிர்ச்சியடைந்தார்.அவர் அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த சோமங்கலம் போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ