உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஊறுகாய்க்கு கபீர் ரக எலுமிச்சை 

ஊறுகாய்க்கு கபீர் ரக எலுமிச்சை 

க பீர் ரக எலுமிச்சை சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த, விவசாயத்தில் டிப்ளமா படித்து, செடிகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது: நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பல விதமான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்யலாம். அந்த வரிசையில், கபீர் ரக எலுமிச்சை சாகுபடி செய்துள்ளேன். இதை, மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களில், எளிதாக சாகுபடி செய்யலாம். அதற்கேற்ப, அடிக்கடி கிளைகளை வெட்டிவிடும் கவாத்து பணியை செய்ய வேண்டும். அதிகமாக காய்கள் காய்க்கும். பிற ரக எலுமிச்சை பழங்களை காட்டிலும், தோல் பகுதி சற்று தடிமனாகவும், பழங்கள் பெரிதாகவும் இருக்கும். பழத்தின் மேல் பகுதி வழுவழுப்பின்றி சொர சொரப்பாக இருக்கும். இந்த கபீர் ரக எலுமிச்சை இலையை மூலிகை சாறு தயாரித்தும், காய்களை ஊறுகாய் போட்டும் விற்றால் அதிக வருவாய் ஈட்டலாம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: -- பி.கிருஷ்ணன், 98419 86400.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை