மேலும் செய்திகள்
எரியாத மின்விளக்குகளை மாற்றுவதில் அலட்சியம்
24-Oct-2024
காஞ்சிபுரத்தில் இருந்து சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி வழியாக சென்னைக்கு பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பாலம் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.வாகன போக்குவரத்து அதிகம் உள்ள மேம்பாலத்தில், மின்விளக்குகள் பல பழுதடைந்து அரைகுறையாக ஒளிர்கின்றன. இரவு நேரத்தில், ரயில்வே மேம்பாலம் இருளில் மூழ்கியுள்ளது. இதனால், சமூக விரோதிகள் மேம்பாலத்தின் சாலையோரத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர். டூவீலரில் தனியாக செல்லும் பெண்கள், கல்லுாரி மாணவியர் அச்சப்படுகின்றனர். மேலும், விபத்து ஏற்படும் சூழலும் உள்ளது. எனவே, ரயில்வே மேம்பாலத்தின் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சீரமைக்க, கோனேரிகுப்பம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நா.நம்பியரசன், பொன்னேரிக்கரை
24-Oct-2024