உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் வரும் 31ல் புத்தக திருவிழா துவக்கம்

காஞ்சியில் வரும் 31ல் புத்தக திருவிழா துவக்கம்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில், மூன்றாவது புத்தக திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, விளம்பர பதாகையை கலெக்டர் கலைச்செல்வி வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் பெற்றுக் கொண்டார்.காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பயன் பெறும் வகையில், மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து, 'புத்தக திருவிழா - -2025ஐ நடத்த உள்ளது.இப்புத்தக திருவிழா வரும் 31 முதல் தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறவுள்ளது. புத்தக திருவிழா தினமும் காலை 10:00 மணிக்கு துவங்கி, இரவு 9:00 மணி வரை நடைபெறவுள்ளது.இதில், பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் பங்கேற்கும் வகையில், 100க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், 1,000க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் அமைக்கப்பட்டு, லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன. இப்புத்தக கண்காட்சி அறிவு பசிக்கு விருந்தாகும் எனவும், பல எழுத்தாளர்கள் படைப்புகளும் இடம் பெறுகின்றன எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், புத்தக திருவிழாவில் தினமும் காலை முதல் மாலை வரை சிறப்பு அழைப்பாளர்களின் கருத்துரைகள், சிந்தனைகளை துாண்டும் பேச்சாளர்களின் கருத்துரைகள், பட்டிமன்றம், மாணவ - மாணவியர் பங்கு பெறும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ