உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாதந்தோறும் பிளாஸ்டிக் சேகரிப்பு காஞ்சி கலெக்டர் துவக்கி வைப்பு

மாதந்தோறும் பிளாஸ்டிக் சேகரிப்பு காஞ்சி கலெக்டர் துவக்கி வைப்பு

காஞ்சிபுரம்,:பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதிலும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து, பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாதத்திற்கு ஒருநாள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் சர்வதீர்த்த குளம் பகுதியில், பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு முகாமை, கலெக்டர் கலைச்செல்வி நேற்று துவக்கி வைத்து, பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தார்.தொடர்ந்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் மஞ்சப்பை வழங்கினார். மக்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் தடைசெய்யப்பட்ட ஒருமுறை உபயோகப்படுத்தி, துாக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.அதற்கு பதிலாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களை பயன்படுத்த கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் குறித்த உறுதிமொழியை மாணவ - மாணவியர் மற்றும் மக்கள் எடுத்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், சப் - கலெக்டர் ஆஷிக் அலி, உதவி ஆட்சியர் (பயிற்சி) மிருணாளினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சத்யா, மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை