மேலும் செய்திகள்
மின் மோட்டார் பழுது ஓரிக்கையில் கழிப்பறை வீண்
25-Aug-2025
கா ஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் ஒட்டியுள்ள பவளவண்ணர் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களின் கூடுதல் குடிநீர் தேவைக்காக, 10 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி சார்பில், குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. பகுதி மக்கள் வீட்டு உபயோக தேவைக்கு தொட்டி நீரை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக ஆழ்துளை குழாயில் அமைக்கப்பட்ட மின் மோட்டார் பழுதானது. மின் மோட்டாரை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், குடிநீர் தொட்டி பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, மின்மோட்டாரை பழுது நீக்கி, குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். - கே.பாஸ்கரன், காஞ்சிபுரம்.
25-Aug-2025