உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி புகார் பெட்டி

காஞ்சி புகார் பெட்டி

கோவில் அருகே நிறுத்தப்படும்பழுதடைந்த வாகனங்கள்? கா ஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி அதிகளவு வெளிநாட்டு சுற்றுலாப் பயணியரும் வந்து செல்கின்றனர். இக்கோவில் சுற்றுச்சுவர் ஒட்டியுள்ள பகுதியை ஆக்கிரமித்து வாகன பழுதுபார்ப்பு கடைகள் முளைத்துள்ளன. இங்கு வரும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள், கோவிலை ஒட்டி நிறுத்தப்படுகின்றன. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த இடமில்லாமல், வெகு தொலைவில் வாகனத்தை நிறுத்தி, கோவிலுக்கு நடந்து வரும் நிலை உள்ளது. எனவே, கோவில் அருகில், பழுது நீக்குவதற்காக வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்றி, அந்த இடத்தில் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கே.விஜயகுமார், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ