உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி புகார் பெட்டி: மண் அரிப்பால் ஏற்பட்ட சாலை பள்ளத்தை சீரமைக்க வேண்டும்

காஞ்சி புகார் பெட்டி: மண் அரிப்பால் ஏற்பட்ட சாலை பள்ளத்தை சீரமைக்க வேண்டும்

மண் அரிப்பால் ஏற்பட்ட சாலை பள்ளத்தை சீரமைக்க வேண்டும் காஞ்சிபுரம் மாநகராட்சி 51வது வார்டுக்கு உட்பட்ட அஞ்சூர், ஸ்ரீதேவிபுரம், தேனம்பாக்கம் மற்றும் வாலாஜாபாத் ஒன்றியம், வில்லிலம் ஊராட்சி கோயம்பாக்கம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர், முத்தியால்பேட்டை ஊராட்சி ஏரிவாய் கிராமம் வழியாக சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையோரம், மழையின் காரணமாக மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது, நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, அஞ்சூர் செல்லும் பிரதான சாலையோரம் மண் அரிப்பால் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க முத்தியால்பேட்டை ஊராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும். - என்.ஏ.சுந்தவாணன், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை