மாநில அளவிலான சிலம்பம் போட்டி காஞ்சி அரசு பள்ளி மாணவி முதலிடம்
காஞ்சிபுரம், மாநில அளவிலான சிலம்பப் போட்டியில், பெரிய காஞ்சிபுரம் அரசு பள்ளி மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.பி.எம்.கே., பீனிக் சிலம்ப பயிற்சி நிறுவனத்தின் சார்பில், மாநில அளவிலான சிலம்பப் போட்டிகள் நாயக்கன்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தன.இந்த போட்டிகளை, நாயக்கன்பேட்டை பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இந்த சிலம்பப் போட்டிகளில், சேலம், சென்னை, வேலுார், ராணிப்பேட்டை, குடியாத்தம், வெட்டுவானம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.இதில், 17 வயது பிரிவினர் போட்டியில், பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி சரஸ்வதி முதலிடம் பிடித்து சாதனை படைத்தள்ளார்.இவருக்கு, பி.எம்.கே., பீனிக் சிலம்ப பயிற்சி நிறுவனத்தின் பயிற்சியாளர் முரளி மற்றும் ஆசிரியர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.