மேலும் செய்திகள்
பெரியப்பட்டு கிராமத்தில் விளையாட்டு போட்டி
16-Jan-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் ஆன்மிக நற்பணி மன்றத்தின் சார்பில், பல்வேறு ஆன்மிக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, கச்சபேஸ்வரர் கோவிலுக்கான தல வரலாறு சம்பந்தமான புத்தகம் வெளியிட முடிவு செய்யப்பட்டது.வரலாறு சம்பந்தமான பல்வேறு ஆய்வுகள், ஆன்மிக நற்பணி மன்றத்தின் சார்பில் மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், கச்சபேஸ்வரர் கோவில் தல வரலாறு புத்தகத்தை சாந்தநாதன் எழுதினார். இப்புத்தகம் வெளியீட்டு விழா கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது.இதில், ஆன்மிக நற்பணி மன்றத்தின் தலைவர் சிவசங்கரன் முதல் பிரதியை வெளியிட, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் குருக்கள் பாலசுப்பிரமணியம் பெற்றுக் கொண்டார். கோவில் பற்றிய வரலாறு, காஞ்சியின் பெருமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
16-Jan-2025