உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையில் குப்பை குவியல்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையில் குப்பை குவியல்

சாலையில் குப்பை குவியல்

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தின் மேற்கு பகுதி மதில் சுவரை ஒட்டியுள்ள பகுதியில், அப்பகுதியினர் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் குப்பையை முறையாக அகற்றாததால், அப்பகுதியில் குப்பை குவியலாக உள்ளது. கெட்டுப்போன உணவுகள், இறைச்சி கழிவுகள் கொட்டுவதால், துர்நாற்றம் வீசுகிறது.காற்றில் பறக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, குப்பையை முறையாக அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- என். சரவணன்,காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி