/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சிமென்ட் காரை உதிர்ந்த நிழற்குடை கட்டடம்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சிமென்ட் காரை உதிர்ந்த நிழற்குடை கட்டடம்
சிமென்ட் காரை உதிர்ந்த நிழற்குடை கட்டடம்
உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்டது காவணிப்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இப்பேருந்து நிறுத்தத்தில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை கட்டடம் தற்போது மிகவும் பழுதடைந்துள்ளது. தளத்தின் உள்பகுதியில் சிமென்ட் காரைகள் உதிர்ந்து, இரும்பு கம்பிகளால் தாங்கி நிற்கின்றன.இதனால், மழைக்காலத்தில் இடிந்து விழக்கூடும் என பயணியர் அச்சப்படுகின்றனர். எனவே, இந்த நிழற்குடை கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, காவணிப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில், புதிய பயணியர் நிழற்குடை வசதி ஏற்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.மோகன்,காவணிப்பாக்கம்.