/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; இரவில் சாலையை மறித்து நிற்கும் மாடுகள்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; இரவில் சாலையை மறித்து நிற்கும் மாடுகள்
இரவில் சாலையை மறித்து நிற்கும் மாடுகள்
வண்டலுார் --- வாலாஜாபாத் சாலையில், ஒரகடம் அடுத்த காரணித்தாங்களில் இருந்து பேரிஞ்சம்பாக்கம் செல்லும் பிரதான சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.பேரிஞ்சம்பாக்கம், வளத்தஞ்சேரி, கண்ணதாங்கல், குண்டுபெரும்பேடு உள்ளிட்ட பல்வேறு கிரமத்தினர், இந்த சாலை வழியே, படப்பை, ஒரகடம் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்த சாலையில், பேரிஞ்சம்பாக்கம் பெருமாள் கோவில் அருகே, இரவு நேரத்தில் சாலையை வழிமறித்து மாடுகள் நிற்கின்றன. இதனால், இரவு நேரத்தில் அவசர தேவைக்காக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.எனவே, சாலையை மறித்து நிற்கும் மாடுகளை பிடிக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மா. புஷ்பராஜ், பேரிஞ்சம்பாக்கம்