மேலும் செய்திகள்
ஒளிராத மின் விளக்குகள்
07-Oct-2024
குன்றத்துார் --- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், குன்றத்துார் அருகே, செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் கடந்து செல்லும் பகுதியில், பாலம் கட்டப்பட்டுள்ளது.பாலத்தின் மீது கம்பம் மற்றும் மின்விளக்குகள் அமைக்கவில்லை. இதனால், இரவு நேரத்தில் பாலம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், வழிப்பறி, வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதை தடுக்க, பாலத்தின் மீது மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.- ராஜேந்திரன்,குன்றத்துார்.
07-Oct-2024