/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; எலைட் டாஸ்மாக் கடையால் போக்குவரத்து நெரிசல்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; எலைட் டாஸ்மாக் கடையால் போக்குவரத்து நெரிசல்
'எலைட்' டாஸ்மாக் கடையால் போக்குவரத்து நெரிசல்
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யும் ‛எலைட்' டாஸ்மாக் கடை முதல் தளத்தில் இயங்கி வருகிறது.போதுமான இடவசதி இல்லாததால், இக்கடைக்கு வரும் வாடிக்கையார்கள் படிகளிலும், சாலையிலும் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது.மேலும், காஞ்சியில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், இந்த 'எலைட்' கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் இருசக்கர வாகனங்களால் ரயில்வே சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, ரயில்வே சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக இயங்கும், 'எலைட்' டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.ரஜினிகாந்த்,காஞ்சிபுரம்.