காஞ்சிபுரம்: புகார் பெட்டி;புதர்மண்டிய பொது கழிப்பறை
காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு எம்பெருமான் கோவில் தெருவில், மாநகராட்சி சார்பில் பொது கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இதை, முறையாக பராமரிக்காததால் கழிப்பறை கட்டடத்தை ஒட்டி, செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளது. இதனால், புதரில் மண்டியுள்ள பாம்பு, தேள், வண்டு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் கழிப்பறைக்குள் படையெடுக்கின்றன. இதனால், பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, செவிலிமேடில் உள்ள பொது கழிப்பறையை சுற்றி மண்டி கிடக்கும் புதர்களையும், கட்டடத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளையும் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜலட்சுமி, செவிலிமேடு.