உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி பழனி ஆண்டவர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா துவக்கம்

காஞ்சி பழனி ஆண்டவர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா துவக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நெமந்தகார தெரு, பழனி ஆண்டவர் கோவிலில், 16வது ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நேற்று துவங்கியது. காஞ்சிபுரம் நெமந்தகார தெருவில், பழனி ஆண்டவர் கோவிலில், 16ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார பெருவிழா, நேற்று, காலை 8:00 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு விநாயகர் வீதியுலா நடந்தது. இரண்டாம் நாள் உத்சவமான இன்று, காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து வீரவாகு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு முருகப்பெருமான் வீதியுலாவும், தொடர்ந்து, தாருகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும், மூன்றாம் நாள் உத்சவமான நாளை மாலை 6:00 மணிக்கு முருகப்பெருமான் வீதியுலாவும், சிங்கமுகா சூரன் வதம் செய்யும் நிகழ்வும், நான்காம் நாள் உத்சவமான வரும் 24ம் தேதி மாலை அக்னி முகன் வதம் செய்யும் நிகழ்வும் நடக்கிறது. ஐந்தாம் நாள் உத்சவமான வரும் 25ம் தேதி வஜ்ரவாகு வதம் செய்யும் நிகழ்வும், ஆறாம் நாள் உத்சவமான வரும் 26ம் தேதி காலை 9:00 மணிக்கு அமரேஸ்வரர் கோவிலில் இருந்து 108 வேல் தரித்து, 108 பால்குட ஊர்வலமும், மாலை 6:00 மணிக்கு சூரன், தன் பூத சேனைகளுடன் திக்விஜயம் எனப்படும் காவலை பலப்படுத்தும் ஊர்வலமும், தொடர்ந்து பானுகோபன் வதம் செய்யும் நிகழ்வும் நடக்கிறது. ஏழாம் நாள் உத்சவமான வரும் 27ம் தேதி காலை 8:00 மணிக்கு அரசு காத்தம்மன் கோவிலில் இருந்து சக்திவேல் பெறும் நிகழ்வும், இரவு 7:00 மணிக்கு வீரவாகு துாதும், சூரசம்ஹாரமும் நடக்கிறது. எட்டாம் நாள் உத்சவமான வரும் 28ம் தேதி மாலை 6:00 மணிக்கு தெய்வானை திருக்கல்யாணமும், 29ம் தேதி இரவு 7:00 மணிக்கு சாந்தி அபிஷேகமும், ஊஞ்சல் சேவை உத்சவத்துடன் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி