உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குபேர விநாயகர் கோவிலில் வரும் 30ம் தேதி கும்பாபிஷேகம்

குபேர விநாயகர் கோவிலில் வரும் 30ம் தேதி கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபரம் டாக்டர் அறிஞர் அண்ணா நகர், கணபதி தெருவில், 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த குபேர விநாயகர் - பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த, சின்ன காஞ்சிபுரம் டாக்டர் அறிஞர் அண்ணா நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் நகர் வாழ் பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது.நாளை, மாலை 4:00 மணிக்கு குபேர விநாயகர் கரிவலமும் தொடர்ந்து, குபேர விநாயகருக்கும், பக்த ஆஞ்சநேயருக்கும் அஷ்டபந்தனம் சாற்றப்பட்டு மஹா அபிஷேகம் நடக்கிறது.இரவு 7:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்குகிறது. நாளை மறுநாள், அதிகாலை 5:00 மணிக்கு கோபூஜையும், 6:00 மணிக்கு புண்ணியாஹவாசனமும், கும்ப ஆவாஹம், பஞ்சசுத்தி ஹோமம் உள்ளிட்டவை நடக்கிறது.காலை 9:00 மணிக்கு கலச புறப்பாடும், தொடர்ந்து புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்படுகிறது. மாலை 6:30 மணிக்கு விநாயகர், ஆஞ்சநேயர் உற்சவர் வீதியுலா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி