உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குன்றத்துார் சாலை படுமோசம்

குன்றத்துார் சாலை படுமோசம்

குன்றத்துார்:குன்றத்துாரில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் செல்லும் சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.குன்றத்துார் அருகே சிறுகளத்துாரில், இந்த சாலை பல இடங்களில் சேதமாகி, குண்டும் குழியுமாக உள்ளது.லேசான மழை பெய்தாலே, சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது.இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை