உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குன்றத்துார் தாலுகா ஜமாபந்தி நிறைவு

குன்றத்துார் தாலுகா ஜமாபந்தி நிறைவு

குன்றத்துார்:குன்றத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நடந்தது. இதில் பொதுமக்கள் பங்கேற்று, இலவச வீட்டு மனை பட்டா, புதிய ரேஷன் கார்டு, பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக மனுக்களை வழங்கினர்.மொத்தம், 851 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 315 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த நிறைவு நிகழ்ச்சியில், 315 பயனாளிகளுக்கு, 4.24 கோடி ரூபாய் செலவிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் சான்றிதழ்களை, அமைச்சர் அன்பரசன் வழங்கினார். மீதமுள்ள, 536 மனுக்கள் மீது விரைவில் தீர்வு காணப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ