100 நாள் வேலை பணியாளர்களால் ஏரி வரத்து கால்வாய் சீரமைப்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூர் ஏரிநீரை பயன்படுத்தி சுற்றியுள்ள பகுதி விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், ஏரிக்கு மழைநீர் வரும் வரத்து கால்வாய் சீரமைக்கும் பணி, ஊராட்சி நிர்வாகம் சார்பில் துவங்கியுள்ளது.இதில், மஹத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் வாயிலாக கால்வாயை துார்வாரி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், கால்வாயை துார்வாருவதோடு, மழைநீரை தேக்கி வைக்கும் வகையில், கால்வாயில் 10 அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழத்திற்கு குழிகள் வெட்டி வருகின்றனர்.இதில், சேகரமாகும் மழைநீரை சாலையோரம் நடவு செய்துள்ள செடிகளுக்கு பயன்படுத்த உள்ளதாக ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.