உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தாங்கல் உபரி நீர் வெளியேற கரும்பாக்கத்தில் தரைபாலம்

தாங்கல் உபரி நீர் வெளியேற கரும்பாக்கத்தில் தரைபாலம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்டது கரும்பாக்கம் கிராமம். இப்பகுதி விவசாய நிலங்களையொட்டி உள்ள தாங்கல் நீரைக் கொண்டு அப்பகுதி விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.மழைக்காலங்களில், இந்த தாங்கலில் தண்ணீர் நிரம்பி, அப்பகுதி சாலை வழியாக உபரி நீர் வெளியேறுகிறது. உபரி நீர் வெளியேறும் சாலைப் பகுதியில், தரைபாலம் அமைக்க கோரிக்கை எழுந்தது.அதன்படி, அச்சாலையில் தரைபாலம் அமைக்க, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 7.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.தற்போது அதற்கான பணி துவங்கி நடைபெறுகிறது. பருவமழை தீவிரம் அடைவதற்குள் பணியை விரைந்து முடிக்க அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை