கோவிந்தவாடியில் நுாலக வார விழா
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், அரசு கிளை நுாலகத்தில், 57வது நுாலக வார விழா, ஊராட்சி தலைவர் சரிதா தலைமையில் நேற்று நடந்தது.இதில், பங்கேற்ற பள்ளி மாணவ - மாணவியர் புத்தகங்களின் தேவை பற்றியும், வாசிப்பால் ஏற்படும் பயன்கள் பற்றியும் பேசினர்.நிகழ்ச்சியில், 25 மாணவ - மாணவியருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர், நுாலகத்திற்கு தேவையான 10 நாற்காலிகளை அன்பளிப்பாக வழங்கினர்.இந்நிகழ்ச்சியில், துணை தலைவர் ராஜராஜேஸ்வரி, நுாலகர் பூபதி, வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், வாசகர் வட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.