குறைந்த மின்னழுத்த பிரச்னை புத்தகரம் கிராமவாசிகள் அவதி
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது புத்தகரம் கிராமம். இக்கிராமத்திற்கு, வாலாஜாபாத் மின் பகிர்வு மையம் வாயிலாக மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.இந்நிலையில், புத்தகரம் மேட்டுத்தெரு மற்றும் எம்.ஜி.ஆர்., நகர் ஆகிய பகுதிகளில், சில நாட்களாக வீடுகளுக்கான மின் இணைப்பில் குறைந்த மின் அழுத்தம் பிரச்னை நிலவுகிறது.இதனால், இரவு நேரங்களில் டியூப் லைட் ஒளிராமலும், மின்விசிறி வேகமற்று சுழலுதல் மற்றும் 'டிவி', குளிர்சாதன பெட்டி, ஏ.சி., உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுது ஏற்படுதல் போன்ற பிரச்னைகள் நிலவுவதாக அப்பகுதியினர் புலம்புகின்றனர்.எனவே, புத்தகரத்தில் மேட்டுத் தெரு, எம்.ஜி.ஆர்., நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.