மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்
12-Mar-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் அருகில், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து மகா கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முடிவு செய்தனர்.அதன்படி, கடந்த பிப்., 10ம் தேதி பாலாலயம் நடந்தது. இதை தொடர்ந்து, 18.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன.கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம், காலை 9:00 மணிக்கு, இதிகாச புராண திவ்ய பிரபந்த பாராயணம், யாகசாலை வாஸ்து ஹோமம் உள்ளிட்டவை நடந்தது.நாளை மறுதினம், அதிகாலை 3:00 மணி முதல், 4:15 மணிக்குள் கும்ப பிம்பராதானமும், காலை 5:15 மணி முதல், 6:45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 8:30 மணிக்கு சர்வ தரிசனமும், மாலை 6:00 மணிக்கு உற்சவர் புறப்பாடும் நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் பூவழகி, ஹிந்து சமய அறநிலையத் துறை உயர் அதிகாரிகள், கோவில் பட்டாச்சாரியார்கள், சன்னிதி பரிசாரகர்கள், கைங்கர்யபரர்கள், பணியாளர்கள், திருப்பணி மற்றும் கும்பாபிஷேக விழா உபயதாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
12-Mar-2025