உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாட்டு தொழுவமாக மாறிய மலையாங்குளம் நெற்களம்

மாட்டு தொழுவமாக மாறிய மலையாங்குளம் நெற்களம்

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம் மலையாங்குளம் கிராமத்தில்,10 ஆண்டுகளுக்கு முன்நெற்களம் அமைக்கப்பட்டது. இந்த நெற்களத்தில் அறுவடை செய்த நெல், நிலக்கடலை ஆகியவற்றை உலர்த்துவதற்காக, விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர்.தற்போது, நெற்களம் முறையான பராமரிப்பு இல்லாமலும், ஆடு, மாடுகள் பராமரிக்கப்படும் இடமாகவும் மாறியுள்ளது. இதனால், விவசாயிகள் விளைபொருட்களை உலர்த்த போதிய இடம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து துறைஅதிகாரிகளிடம் புகார் அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:தற்போது நெல் அறுவடை நடந்து வரும் நிலையில், நெற்களத்தில் தனிநபர்கள் மாடுகளை கட்டி ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால், நெல்லை உலர்த்த போதிய இடம் இல்லாத நிலை உள்ளது.மேலும், சேதமடைந்த நெற்களத்தை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ