மேலும் செய்திகள்
உலக இதய தின கருத்தரங்கம்
30-Sep-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில், உலக விபத்து நாளையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீலஷ்மி சுகாதாரம் சார்ந்த அறிவியல் கல்வி நிறுவனத்தில் பயிலும் 50 செவிலியர் பயிற்சி மாணவியருக்கு ஆருயிர் அனைவரும் உயிர் காப்போம்' திட்டத்தின்படி அடிப்படை முதலுதவி பயிற்சி முகாம் நடந்தது.இதை, காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சு.மனோகரன் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார்.அதன்பின் அவர் பேசியதாவது:அனைவரும் அடிப்படை முதலுதவி பயிற்சியை பெறுவதன் வாயிலாக, நம் அரிய உயிரை எவ்வாறு காப்பாற்றலாம் என்பதை, இன்று 'தினமலர்' நாளிதழில் வெளிவந்த 'சென்னை புழலில், கோவில் பூசாரியை சி.பி.ஆர்., செய்து காப்பாற்றப்பட்ட செய்தியை மேற்கோள்காட்டி பேசினார்.இதில், துணை தலைவர் டாக்டர் ரவி முன்னிலை வகித்தார். பொருளாளர் பேராசிரியர் டாக்டர் ஞானகணேஷ், மானிக்யூன் எனும் செயற்கை மார்பளவு உடல் மாதிரிகளை வைத்து முதலுதவிகளை எவ்வாறு செய்வது என விளக்கினார்.
30-Sep-2024