1,256 பேருக்கு மருத்துவ பரிசோதனை
காஞ்சிபுரம்: ஈஞ்சம்பாக்கத்தில் நடந்த மருத்துவ முகாமில், 1,256 பேருக்கு பரிசோதனை நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில், நேற்று நடந்த மருத்துவ முகாமிற்கு, வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.பி., செல்வம், காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., எழிலரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஈஞ்சம்பாக்கம், பெரிய கரும்பூர், விஷகண்டிகுப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த, 1,256 பேர் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்றனர். இதில், 58 பேருக்கு இதய ஸ்கேன், 44 பேருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் நடந்தன. இம்முகாமில், ஈஞ்சம்பாக்கம், ஊராட்சி தலைவர் காமாட்சி, ஒன்றிய கவுன்சிலர் லோகுதாஸ், விவசாய அணியைச் சேர்ந்த சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.