உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கேன்டீன் கழிவுநீர் ஏரியில் கலப்பு காரணித்தாங்கலில் அடாவடி

கேன்டீன் கழிவுநீர் ஏரியில் கலப்பு காரணித்தாங்கலில் அடாவடி

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட காரணித்தாங்கல் கிராமத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிநீர் அப்பகுதியினரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.இந்த நிலையில், காரணித்தாங்கலில் இருந்து, ஒரகடம் செல்லும் இணைப்பு சாலையோரம் உள்ள தனியார் கேன்டீனில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, பொக்லைன் வாயிலாக கால்வாய் அமைத்து ஏரியில் கலக்க விடுகின்றனர்.இதனால், ஏரியின் நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியின் நிலத்தடி நீர் மாசடையும் சூழல் உள்ளது. மேலும், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள், மாசடைந்த ஏரி நீரை பருகுவதால் நோய் பாதிப்பு ஏற்படுகிறது.எனவே, ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, நீர் நிலைகளை பாதுகாக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி