உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  சிலாம்பாக்கத்தில் தடுப்பணை பணியை விரைந்து முடிக்க எம்.எல்.ஏ., உத்தரவு

 சிலாம்பாக்கத்தில் தடுப்பணை பணியை விரைந்து முடிக்க எம்.எல்.ஏ., உத்தரவு

உத்திரமேரூர்: சிலாம்பாக்கத்தில் தடுப்பணை கட்டும் பணியை, உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர், காஞ்சிபுரம் தி.மு.க., -- எம்.பி., செல்வம் ஆகியோர் நேற்று பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர். உத்திரமேரூர் தாலுகா, சிலாம்பாக்கம் செய்யாற்றின் இருபுறமும், 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள, விளைநிலங்களுக்கு ஆற்றுக்கால்வாய் மற்றும் கிணற்று பாசனங்களின் மூலமாக தண்ணீர் பாசனம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அப்பகுதிகளில் கோடை காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க, சிலாம்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட, சுற்றுவட்டார கிராமத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதையடுத்து, 2023ம் ஆண்டில், 35 கோடி ரூபாய் மதிப்பில், நீர்வளத் துறை சார்பில், தடுப்பணை கட்டும் பணி துவக்கப்பட்டது. தற்போது, தடுப்பணை கட்டும் பணி 98 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிலாம்பாக்கம் செய்யாற்றில் கட்டப்படும் தடுப்பணையை, உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர், காஞ்சிபுரம் தி.மு.க., -- எம்.பி., செல்வம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தடுப்பணை கட்டும் பணியை விரைந்து முடிக்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, செய்யாற்றில் நீர்வரத்து குறைந்தவுடன், தடுப்பணை கட்டுமான பணி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் மார்கண்டன், ஒன்றிய தி.மு.க., செயலர் ஞானசேகரன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ