மாதிரி லோக்சபா கூட்டத்தொடர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
காஞ்சிபுரம், மாதிரி லோக்சபா கூட்டத்தொடரில், 33 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு குறித்து, மாணவ -- மாணவியர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்திய தொழில் கூட்டமைப்பினர் மற்றும், 'யங் இந்தியா' அமைப்பினர் சார்பில், காஞ்சிபுரம் தனியார் பன்னாட்டு பள்ளி மாணவ -- மாணவியருக்கான மாதிரி லோக்சபா கூட்டத்தொடர் நேற்று முன்தினம் மற்றும் நேற்று நடைபெற்றது.ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட தனபால், மாநிலங்களவையின் செயல்பாடு குறித்து எடுத்துரைத்தார். அதேபோல, காஞ்சிபுரம் தி.மு.க., - -எம்.எல்.ஏ., எழிலரசன் மற்றும் காஞ்சிபுரம் தி.மு.க., - -எம்.பி., செல்வம், லோக்சபா குறித்து மாணவ - மாணவியர் இடையே உரையாடினர்.இதையடுத்து, ஐந்து அரசியல் கட்சிகள், நான்கு சுயேச்சை எம்.பி., உள்ளிட்ட 120 எம்.பி., மாதிரி லோக்சபாவில் பிரவேசித்தனர்.வெவ்வேறு விவாதங்களில் பங்கேற்பது, 33 சதவீதம் மகளிர் இடஒதுக்கீடு, என, பல்வேறு செயல்பாடுகளை செய்தனர்.